25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

 பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் பல மோசமான ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். இதற்கு முக்கிய காரணம் பெண்களை விட ஆண்களுக்கு தங்களது ஆரோக்கியத்தின் மீது அக்கறை சற்று குறைவாக இருப்பது தான். மேலும் பெண்கள் எப்போதும் தங்கள் அழகின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் அதிக அக்கறை எடுப்பதால், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் எப்போதுமே கவனமாக இருப்பார்கள்.

Foods Men Over 25 Should Eat

ஆனால் ஆண்களோ நண்பர்களுடன் சேர்ந்துவிட்டால் போதும், என்ன சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று பார்க்கமாட்டார்கள். இப்படி கண்டபடி கண்ட உணவுகளை சாப்பிடுவதால், ஆண்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி குறைந்து, விரைவில் நோய்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள்.

ஆண்களுக்கு ஏற்படும் தர்மசங்கடமான உடல்நல பிரச்சனைகள்!!!

எனவே ஆண்கள் 25 வயதை எட்டிவிட்டால், தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிக்கவும் ஒருசில குறிப்பிட்ட உணவுகளை தவறாமல் அடிக்கடி உட்கொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் 25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆண்களும் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து இனிமேல் உங்கள் உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளி சூப்பர் உணவுகளுள் முக்கிய உணவாகும். ஏனெனில் இது ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. ஆய்வுகளில் தக்காளியில் உள்ள லைகோபைன், குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. முக்கியமாக இந்த பிரச்சனைகள் அனைத்துமே ஆண்கள் அதிகம் அவஸ்தைப்படும் முக்கிய பிரச்சனைகளாகும். எனவே தக்காளியை உங்கள் உணவில் மட்டுமின்றி, சாலட்டிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடல் சிப்பி

கடல் சிப்பி

கடல் சிப்பியில் ஜிங்க் அதிகளவு நிறைந்துள்ளது. இது ஆண்களின் கருவளத்திற்கும், பாலியல் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான சத்தாகும். ஜிங்க் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவுவதோடு, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கும் உதவக் கூடியது. மேலும் ஜிங்க் தலைமுடிக்கும் மிகவும் நல்லது.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியமான அளவில் நிறைந்துள்ளது. முழு தானியங்களான ஓட்ஸ் மற்றும் கைக்குத்தல் அரிசியில் பி வைட்டமின்கள் ஆரோக்கியமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இது ஒட்டு மொத்த உடலுக்கும் நல்லது மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுபட உதவும். முழு தானியங்களில் உள்ள ஃபோலேட் விந்தணுவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே சமயம் அவற்றில் உள்ள பயோட்டின் முடி கொட்டுவதைத் தடுக்க உதவும்.

பூண்டு

பூண்டு

ஆண்கள் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் பூண்டு இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பணியில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் ஆண்கள் பூண்டு பற்களை அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய பிரச்சனைகளின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனில் புரோட்டீன் மட்டும் வளமான அளவில் இல்லை, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளது. இவை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டவை. சால்மன் மீனை உணவில் ஆண்கள் அதிகம் சேர்ப்பதன் மூலம், இதய நோய், பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றின் அபாயம் குறையும்.

ப்ளுபெர்ரி

ப்ளுபெர்ரி

ப்ளுபெர்ரியில் உள்ள அதிகளவிலான புரோஅந்தோசையனிடின்கள், ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் அபாயத்தைக் குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் ப்ளுபெர்ரி பழங்கள் இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதி போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலி மட்டுமின்றி, முட்டைக்கோஸிலும் சக்தி வாய்ந்த புற்றுநோயை எதிர்க்கும் கெமிக்கலான சல்போரஃபேன் உள்ளது. இந்த காய்கறிகளை ஆண்கள் அடிக்கடி உண்பதன் மூலம், சிறுநீர்ப் பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயமும் குறையும்.

முட்டை

முட்டை

ஆண்களே! தலைமுடி அதிகம் கொட்டுகிறதா? அப்படியானால் அன்றாட உணவில் முட்டையைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். முட்டையில் உள்ள அதிகப்படியான புரோட்டீன், தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, உயர் இரத்த அழுத்தத்தையும் தடுக்கும். ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன. சில ஆண்கள் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், புரோஸ்டேட் புற்றுநோயின் முன்னேற்றத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Comments

Popular posts from this blog

Kindness Repay for Kindness

Life Goes On!!