கலோரி அதிகமாக இருந்தாலும் இந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தான்…

 உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவரும் முதலில் தேர்ந்தெடுக்கும் விஷயம் என்றால், ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் கலோரிகள் எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்வர். நாம் உண்ணும் அனைத்து வகையான உணவிலுமே கலோரிகள் நிறைந்திருக்கின்றன. ஏனென்றால், அத்தகைய கலோரிகள் தான் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது, உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பராமரிக்கவும் கலோரிகள் அவசியம்.

High Calorie Food Items That Are Actually Healthy

சராசரியாக ஒரு நபர் எடுத்துக் கொள்ள வேண்டிய கலோரியின் அளவானது, அவரது வயது, பாலினம் மற்றும் உடலமைப்பை பொறுத்தே கூறப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது தான் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. மேலும், அவை இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கக் கூடும்.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்க தினமும் கசாயம் குடிக்குறீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரி அதிகமாக கொண்ட உணவுகளில் ஆரோக்கியமானவை

கலோரி அதிகமாக கொண்ட உணவுகளில் ஆரோக்கியமானவை

கலோரிகள் என்பது அனைத்து உணவுகளிலுமே காணப்படும் ஒன்று தான். அதற்காக கலோரி அதிகமாக உள்ள அனைத்து உணவுகளையுமே ஆரோக்கியமற்றவை என்று கூறிவிட முடியாது. நிறைய உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், அவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதோடு, உடல் எடை குறைக்கவும் உதவிடுகிறது. அப்படிப்பட்ட 5 உணவு வகைகளை தான் இப்போது பார்க்கப் போகிறோம்...

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter)

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter)

வெண்ணெயில் தான் அளவிற்கு அதிகமாக கலோரி உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியெனில், இந்த வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் நட்ஸ் வெண்ணெயிலும் கூட அதிகமான கலோரி இருக்க தான் செய்கிறது. ஆம், 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் சுமார் 100 கலோரிகள் உள்ளது. இது கிட்டதட்ட சாதாரண வெண்ணெயில் உள்ள கலோரியின் அளவிற்கு சமம் தான். அதுமட்டுமல்லாது, சாதாரண வெண்ணெயை விட வேர்க்கடலை வெண்ணெயில் அதிகமான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு, பைட்டோநியூட்ரியண்ட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

சியா விதைகள்

சியா விதைகள்

ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் சியா விதைகள் நிச்சயம் இடம் பிடிக்கக் கூடியவை. ஏனென்றால், அவற்றில், அதிக அளவில் நார்ச்சத்து, ஒமேகா-3, புரதச்சத்து மற்றும் ஜிங்க் ஆகியவையும் உள்ளன. இந்த சிறு விதையானது, சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சிஎதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அப்படியெனிலும், சியா விதைகளில் கலோரிகள் அதிகமான தான் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதையில் சுமார் 70 கலோரி உள்ளது என்றால் நம்புவீர்களா?

சீமைத்திணை (Quinoa)

சீமைத்திணை (Quinoa)

உடல் எடையில் அதீத அக்கறை கொண்ட அனைவரது உணவு பட்டியலிலும் இந்த சீமைத்திணை நிச்சயம் இடம் பிடித்திக்கும். ஆனால், அதை உண்ணும் பலருக்கு அதில் அதிக அளவு கலோரி உள்ளது என்பது தெரிந்திருக்காது. ஒரு கப் சமைக்கப்பட்ட சீமைத்திணையில் (அதாவது, 185 கிராம்) 222 கலோரி உள்ளது. சராசரியாக, 1 கப் சமைத்த பிரவுன் அரிசிக்கு (195 கிராம் ) நிகராகும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அது தவிர, ஒமேகா 6, ஒமேகா 3, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவையும் ஆலிவ் ஆயிலில் உள்ளன. இவை அனைத்தும் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, ஆரோக்கியமாக உடல் எடையை பெற்றிடவும் உதவிடும். இருப்பினும், ஆலிவ் ஆயிலில் கொழுப்பு மற்றும் கலோரி அதிகமாக தான் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 120 கலோரிகளும், 14 கிராம் கொழுப்பும் உள்ளது.

நட்ஸ் கலவை

நட்ஸ் கலவை

நட்ஸ் மற்றும் விதைகள் ஆரோக்கியமான சிற்றுண்டியாக பெரும்பாலானோர் விரும்புவதாக கருதப்படுகின்றது. ஆனால், இதில் கலோரிகள் அதிகமாக உள்ளது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. 100 கிராம் நட்ஸ் கலவையில் 462 கலோரிகள் உள்ளன.

Comments

Popular posts from this blog

Kindness Repay for Kindness

Life Goes On!!